கூடங்குளம் முதல் அணு உலை மின் உற்பத்தி விரைவில் தொடங்கும் – ரஷ்யாவில் பிரதமர் உறுதி

விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு உள்பட 5 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட
ரஷ்யாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவைச் சந்தித்தார். விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு உள்பட 5 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட இருவரும் பின்னர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலை இன்னும் சில வாரங்களிலும், இரண்டாவது அணுஉலை அடுத்த 6 மாதங்களுக்குள்ளாகவும் செயல்படத் தொடங்கும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.
கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள 2 நவீன அணுஉலைகளும் தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு, வாழ்வாதாரம் குறித்த அச்சத்தால் அப்பகுதியில் நடைபெறும் போராட்டம் தற்காலிகமானதே. இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என நம்புகிறோம் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.
கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அணுஉலைகளை நிறுவுவது குறித்து ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடப்படவில்லை. பிரதமரின் அறிவிப்பு, கூடங்குளம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
துக்கநாள் அனுசரிக்கும் மக்கள்
பிரதமரின் ரஷ்ய சுற்றுப்பயணத்தை கூடங்குளம் அணு மின்நிலைய எதிர்ப்பாளர்கள் துக்க நிகழ்ச்சியாக கடைபிடிக்கின்றனர். வெள்ளிக்கிழமை 72 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ள அவர்கள் தங்களது வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றியுள்ளனர். புத்தாண்டில் தங்களது போராட்டத்தை புத்தெழுச்சியுடன் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக கூறியுள்ள போராட்டக்குழுவினர், இது குறித்து இடிந்தகரையில் இன்று கூடி முடிவு செய்யப் போவதாகவும் கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications