டெல்லியில் கடும் பனிமூட்டம் – அடுத்தடுத்து 10 கார் மோதி விபத்து
டெல்லி: டெல்லியில் அதிகாலை நேரத்தில் நிலவிய கடும் பனி மூட்டத்தினால் டெல்லி-நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் பழுதாகி நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து 10 கார்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதனால் நொய்டா எக்ஸ் பிரஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒருவாரகாலமாக கடும் பனி கொட்டிவருகிறது. டெல்லியில் இன்று காலை தட்பவெட்பநிலை 4.8 டிகிரி செல்சியசாக இருந்தது. இன்று காலையில் விடிந்த பின்னரும் சாலை தெளிவாக தெரியாதபடி நீண்ட நேரம் புகை கண்ணை மறைத்ததால் படேல் நகர், காஜிபூர், சரை கலேகான், நிஜாமுதீன் பகுதி களில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
10 கார்கள் அடுத்தடுத்து மோதல்
இதற்கிடையே இன்று அதிகாலை 4.30 மணிக்கு டெல்லி-நொய்டா எக்ஸ் பிரஸ் சாலையில் ஒரு கண்டெய்னர் லாரி பழுதாகி சாலை நடுவே நின்று விட்டது. லாரி நிற்பது கடும் பனி புகை மூட்டத்தில் தெரியவில்லை. இதனால் அந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக வந்த ஒரு கார் மோதியது. அடுத்தடுத்து 10 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இதனால் நொய்டா எக்ஸ் பிரஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வாகனங்கள் அகற்றப்பட்டபின்னர் போக்குவரத்து சீரடைந்தது. வட இந்திய மாநிலங்களில் கடும் குளிரை தாக்குபிடிக்க முடியாமல் இதுவரை 39 பேர் பலியாகியுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications