சூறாவளி: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீசி வருகிறது. மேலும் நேற்று ராமேஸ்வரத்தில் கன மழை பெய்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பாக்ஜலசந்தி கடலில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும், இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல சிரமம் ஏற்படும் என்றும் ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடலுக்கு செல்ல தயாராக இருந்த ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் டோக்கன் வழங்காமல் ராமேஸ்வரம், மண்டபம் மீன்துறை உதவி இயக்குனர்கள் தடை விதித்தனர்.
இதனால் சுமார் 2,000 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. சுமார் 10,000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications