மலேசியாவில் நெல்லை தொழிலாளியிடம் ஓரினச்சேர்க்கை தொல்லை - மீ்ட்க கோரி புகார்
நெல்லை: மலேசியாவில் ஓட்டல் பணிக்கு சென்றுள்ள இடத்தில் அங்குள்ள தொழிலாளர்கள் பலர் ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்துவதாக நெல்லையைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அந்த கும்பலிடம் இருந்து அவரை மீட்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அவரது உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் ராஜன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ராஜனுக்கு அதிகாலை முதல் நள்ளிரவு வரை சுமார் 18 மணி நேரம் வேலை செய்ய வாங்கிக்கொண்டு குறைந்த ஊதியமே கொடுத்ததாக கூறப்படுகிறது. வேலை முடிந்து நள்ளிரவில் படுத்து தூங்கும் போது சிலர் ஹோமோ செக்சுக்கு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜனை அவர்கள் சித்ரவதை செய்துள்ளனர்.
நாடு திரும்ப முடிவு
இதனால் மனம் வெறுத்த ராஜன் ஓட்டல் உரிமையாளரிடம் தான் நாடு திரும்ப விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் அங்குள்ளவர்கள் அவரது பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக் கொண்டு கொடுக்க மறுக்கிறார்களாம். இதனால் ராஜன் நாடு திரும்ப முடியாமல் அங்கு தவித்து வருகிறார்.
சமீபத்தில் தனது நிலையை செட்டிகுளத்தில் உள்ள உறவினர்களிடம் போன் மூலம் தெரிவித்து தன்னை மீட்டு இந்தியா கொண்டு வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அந்த போன் எண்ணிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இதனால் அவரது உறவினர்கள் எம்எல்ஏ மற்றும் கலெக்டரிடம் ராஜனை மீ்ட்டு தரும்படி புகார் கூறி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications