ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ஜெ. திடீர் ஆலோசனை- சசி ஆதரவு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை?

ஜெயலலிதா வீட்டை விட்டும், அவரது நட்பு வட்டத்தை விட்டும் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் பூண்டோடு துரத்தப்பட்டு விட்டனர். இதனால் அதிமுகவினர் பெரும் உற்சாகமடைந்தனர். இதைத்தானே அம்மா இத்தனை காலமாக எதிர்பார்த்தோம் என்று அவர்கள் பூரிப்படைந்துள்ளனர்.
இந்த நிலையில் அடுத்து சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் உள்ளிட்டோரை களையெடுக்கும் வேலையில் ஜெயலலிதா இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. பெருமளவில் சசிகலாவுக்கு ஆதரவான அதிகாரிகள் அரசின் அனைத்து மட்டத்திலும் நிரம்பியுள்ளன். இவர்களையெல்லாம் களையெடுத்து ஆட்சி நிர்வாகத்தை சீரமைக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முழுவதும் ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட வீட்டிலேயே தங்கி அதிகாரிகளுடன் பல கட்டமாக முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார். தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி, டிஜிபி ராமானுஜம், உளவுத்துறை ஐஜி தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் இதில் முக்கியமாக கலந்து கொண்டனர்.
பல முன்னாள் அதிகாரிகளும், முன்னாள் டிஜிபி உள்ளிட்டோரும் முதல்வரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். திமுக ஆட்சிக்காலத்தில் முக்கிய அதிகாரியாக செயல்பட்டு வந்த இறையன்புவும் முதல்வரைச் சந்தித்துப் பேசியதை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தற்போது இவர் பணியாளர் சீர்திருத்தத் துறை செயலாளராக இருக்கிறார். இறையன்புவுக்கு முக்கியப் பொறுப்பை ஜெயலலிதா கொடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேர்மையான அதிகாரியாக அறியப்படுபவர் இறையன்பு என்பது நினைவிருக்கலாம்.
இவர்கள் தவிர முக்கிய அமைச்சர்களும் கூட ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை பெற்றனர்.
இந்த ஆலோசனைகளின்போது சசிகலா மற்றும் அவரைச் சேர்ந்தவர்களின் நிழலைக் கூட அண்ட விடாதீர்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டதாக தெரிகிறது. மேலும் சசிகலாவுக்கு ஆதரவாக யாரும் செயல்படக் கூடாது என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து விரைவில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications