முல்லைப் பெரியாறு: 'கேரள ஜால்ரா' டி.கே.பாலை நீக்குமாறு சோனியாவிடம் திமுக கோரிக்கை
டெல்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு சுமுகத் தீர்வு காணக் கோரி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் திமுக எம்.பிக்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில், அக்கட்சியின் எம்.பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். பின்னர் அவர்கள் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினர்.
இச் சந்திப்பு குறித்து திமுக எம்பி டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், கேரள மாநிலத்துக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். கேரளத்தில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் குழுவில் இடம் பெற்றுள்ள டி.கே. பால் என்பவரை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் குழுவில் இருந்து நீக்க வேண்டும். ஐ.ஐ.டி. ரூர்க்கி சார்பில் "அணை பலமாக இல்லை' என்று அவர் அறிக்கை தாக்கல் செய்தவர் என்று பிரதமரிடம் கூறினோம்.
இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
இதே கோரிக்கைகள் குறித்து, சோனியா காந்தியிடமும் வலியுறுத்தினோம். பிரதமருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சோனியா காந்தி தெரிவித்தார் என்றார் இளங்கோவன்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications