ஹரியானாவில் பள்ளி பேருந்து, டிரக் பயங்கர மோதல்: 11 குழந்தைகள் பலி

Subscribe to Oneindia Tamil

அம்பாலா: ஹரியானா மாநிலம் அம்பாலாவில் பள்ளி பேருந்தும், டிரக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 11 குழந்தைகள் உள்பட 12 பேர் பலியாகினர்.

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ளது குரு தேவ் அர்ஜுன் ப்பளிக் ஸ்கூல். இன்று காலை அந்த பள்ளி பேருந்து 5 முதல் 8 வயதுள்ள 30 மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி நோக்கி சென்றது. அந்த பேருந்து சாஹா-சஹாபாத் ரோட்டில் செல்கையில் கடும் பனிமூட்டம் காரணமாக எதிரே வந்த டிரக்கை பாராமல் அதனுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் 11 குழந்தைகள் பலியாகினர், 19 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமைடந்த பேருந்து ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இறந்தவர்களில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் திவ்யா, ராகுல், ரிஷப், ரவீஷ், புல்கிட், ஹரிஷ் மற்றும் அனு ஆகும்.

கடும் பனிமூட்டம் தான் இந்த விபத்திற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே டிரக் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+