அதிமுக அரசை உரசிப் பார்க்க சங்கரன்கோவிலில் மதிமுகவுக்கு வாக்களியுங்கள்- நாஞ்சில் சம்பத்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவி்ல்: அதிமுக அரசை உரசிப் பார்க்க மக்கள் மதிமுகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுகவை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

சங்கரன்கோவிலில் மதிமுகவின் இளைஞர் அணி பொதுக் கூட்டம் நடந்தது.அப்போது பேசிய நாஞ்சில் சம்பத் படு சூடாகப் பேசினார்.

அவர் பேசுகையில், 100சதவிகித பஸ் கட்டண உயர்வு சுமை தாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். பிரச்சிணைகளைத் திசைதிருப்பவே சசிகலா விவகாரம் நடந்து வருகிறது. அப்படி என்றால் அவர்கள் மீது ஜெயலலிதா ஏன் விசாரணைக கமிஷன் வைக்கவில்லை.

ஆய்ந்து அறிந்த பின்பு சமச்சீர் கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்தார் கலைஞர் ஆட்சிக்கு வந்த உடனேயே சமச்சீர்கல்விக்கு சமாதிகட்டிவிட்டீர்கள். ஓதாமல் ஓரு நாளும் இருக்க வேண்டாம் என்று சொன்ன தமிழ் நாட்டில், நீங்கள் இரண்டரை மாதம் ஓதவிடவில்லை.

சமச்சீர் பாட புத்தகத்தில் வள்ளுவர் படத்தை பச்சை அட்டை ஒட்டி மறைத்தீர்களே வள்ளுவர் என்ன தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளரா? அவர் என்ன குற்றம் செய்தார் உங்களுக்கு. கலைஞர் ஆட்சியின் மகத்தான சாதனை செம்மொழி நூலகம். அந்த நூலகத்தை மூட நினைப்பது 4 சிறைச்சாலைகளை திறப்பதற்குச் சமம்.

தமிழ் நாட்டு நிதி நிலைமை பற்றாக்குறை என்கிறார். ஒருபற்றாக்குறை நாடு என்றால் அந்தப் பற்றாக்குறைக்கு என்ன காரணம் என்று ஒரு முதலமைச்சர் யோசிக்க வேண்டும். பற்றாக்குறை இருந்தால் ஒரு நாடு வளம்பெறாது நான் யாசித்துக் கேட்கிறேன்.

இந்த இடைத் தேர்தலில் ம.தி.மு.க.வை வேற்றி பெறச்செய்யுங்கள். சங்கரன்கோவில் தொகுதிக்கு ஒரு மரியாதை கிடைக்கும். இந்த அரசாங்கத்தை உரசிப்பார்ப்பதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்புத்தாருங்கள் என்றார் சம்பத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+