For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புயல் பாதித்த பகுதிகளை நாளை ஹெலிகாப்டரில் இருந்தபடி பார்வையிடுகிறார் ஜெ.

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை ஹெலிகாப்டரில் இருந்தபடி பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதற்காக அவர் நாளை கடலூர் செல்கிறார்.

தானே புயலால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மிகப் பெரிய சீரழிழை சந்தித்துள்ளன. விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின்சாரமே இல்லை, பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் புயல் சேத நிலவரத்தைப் பார்வையிட முதல்வர் ஜெயலலிதா நாளை செல்கிறார். நாளை பிற்பகல் கடலூருக்கு செல்லும் அவர் ஹெலிகாப்டரில் இருந்தபடி புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புயல் பாதித்த அனைத்துப் பகுதிகளிலும் அவர் ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்யவுள்ளார்.

மேலும் நிவாரணப் பணிகளையும் அவர் ஆய்வு செய்யவுள்ளார்.

English summary
Chief Minister Jayalalitha to hold aerial survey in Cyclone affected areas in Cuddaloreand Villupuram districts tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X