மோட்டார் சைக்கிள் பேரணி்யில் பங்கேற்க எல்.எல்.ஆர். வாங்கிய சந்திரபாபு நாயுடு
சித்தூர்: ஆந்திர மாநில அரசைக் கண்டித்து நடைபெறும் இரண்டு சக்கர வாகன பேரணியில் கலந்து கொள்ளவிருக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முன்னெச்சரிக்கையாக பைக் ஓட்ட எல்எல்ஆர் வாங்கியுள்ளார்.
முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று சாந்திபுரம் பகுதியில் இரு சக்கர வாகன பேரணி நடத்துகிறார். கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த தவறிய மாநில அரசைக் கண்டித்து தான் இந்த பேரணி நடத்தப்படுகிறது. பேரணியையொட்டி பைக் லைசென்ஸ் கேட்டு அவர் தனது தொகுதியான குப்பத்தில் விண்ணப்பித்தார்.
விண்ணப்பத்தில் தனது கட்சி அலுவலக முகவரியைக் கொடுத்திருந்தார்.
இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது,
சந்திரபாபு நாயுடு இன்று சாந்திபுரத்தில் இரு சக்கர வாகனப் பேரணி நடத்துகிறார். அதில் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்ட அவர் விரும்பவில்லை. நாயுடு லைசென்ஸ் இல்லாமல் பேரணியில் பைக் ஓட்டினார் என்று பிறர் குறைகூறுவதைத் தவிர்க்க விரும்புகிறார். அதற்காகத் தான் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தார் என்றார்.
இந்நிலையில் குப்பம் வந்த சந்திரபாபு நாயுடுவிடம் போக்குவரத்து அதிகாரி ஒருவர் பைக் ஓட்டுவதற்கான எல்எல்ஆரைக் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications