பிறந்த நாளில் பெரும்பாலான நேரத்தை நீதிமன்றத்தில் கழித்த கனிமொழி
டெல்லி: திமுக எம்பி கனிமொழிக்கு நேற்று 44வது பிறந்த நாளாகும். ஆனால், 2ஜி வழக்கு விசாரணை தொடர்பாக நேற்று அவர் தனது பெரும்பாலான நேரத்தை நீதிமன்றத்திலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள கனிமொழி, நேற்று இந்த வழக்கு தொடர்பாக டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு காலை 10 மணிக்கு வந்தார். விசாரணை தொடர்ந்ததால் மாலை 4 மணி வரை அங்கேயே இருந்தார்.
மாலையில் வீடு திரும்பிய கனிமொழி தனது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவுடன் பிறந்த நாளைக் கொண்டாடினார்.
முன்னதாக நேற்று காலை அவரது தந்தை மு.கருணாநிதி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதே போல கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், சகோதரர்கள் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின் ஆகியோரும் கனிமொழிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக நாடாளுமன்றக் குழு உறுப்பினர் டி.ஆர். பாலு, திமுக எம்பி ஹெலன் டேவிட்சன் டெல்லியில் கனிமொழியின் வீட்டுக்குக் காலையில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தொலைபேசி மூலம் கனிமொழியை தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.
இதே வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் டி.வி. நிர்வாகி சரத்குமார், ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வா ஆகியோரும் கனிமொழிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விஜய்யை வீழ்த்த கனிமொழிக்கு பொறுப்பு! ஸ்டாலினின் அசைன்மென்ட்.. அதிரடி அரசியல் திட்டம்!











Click it and Unblock the Notifications