புயல் சேதம் குறித்து வாய் திறக்க மறுக்கிறதே மத்திய அரசு: திருமா. கொதிப்பு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் ஏற்பட்டுள்ள கடும் சேதம் குறித்து மத்திய அரசு வாயே திறக்காமல் மெளனமாக இருப்பது அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோபத்துடன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்ட புயல் சேதங்களைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில்,
கடந்த 3 நாட்களாக கடலூர் மாவட்டம் முழுவதும் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினேன். புயலில் உயிரிழந்த 8 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கினேன்.
புயல் அடித்து 4 நாள்கள் ஆகியும் நிவாரண உதவிகள் போய் சேராமல் முற்றிலும் முடங்கி கிடக்கிறது. மாவட்ட நிர்வாகம் மந்தமாக செயல்படுகிறது.
குடிநீர் மின்சாரம் மாற்று உடைகள் இன்றி மக்கள் தவிக்கிறார்கள். ஆனால் நிவாரண உதவிகள் குறித்து மத்திய அரசு வாய் திறக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. பல மாநிலங்களில் இயற்கைச் சீற்றம் நிகழ்ந்தபோது மத்திய அரசு உடனடியாக நிவாரண நிதி வழங்கி இருக்கிறது மத்திய அரசு.
கடலூர் மாவட்டத்தில் தானே புயல் சேதம் ரூ.10 ஆயிரம் கோடி இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். முந்திரி மரங்கள் உள்ளிட்ட பணப் பயிர்கள் சேதம் வரலாறு காணாதது. முந்திரி மரங்களை பயிரிட்டு வளர்க்க 13 ஆண்டுகள் ஆகும். எனவே மரங்கள் சாகுபடிக்கு சிறப்புத் திட்டம் அறிவிக்க வேண்டும்.
கூரை வீடுகள் அனைத்தையும் மாற்ற கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். பாதிப்பு அதிகமாக இருப்பதால் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
இருளில் மூழ்கிக்கிடக்கும் கடலூர் மாவட்டத்தில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர்களுக்கான நிவாரணத் தொகையை 5 மடங்காக உயர்த்த வேண்டும். புயலில் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி முதல் கட்டமாக வழங்க வேண்டும் என்றார் அவர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications