தானே புயலில் சேதமடைந்த புதுச்சேரியை இயற்கை பேரிடர் பகுதியாக அறிவிக்க சிபிஎம் கோரிக்கை
புதுச்சேரி: இயற்கையால் சீரழிந்த இயற்கை பேரிடர் பகுதியாக புதுச்சேரியை அறிவிக்க வேண்டும் என்று சி.பி.எம். கோரி்க்கை விடுத்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ.பெருமாள் புதுச்சேரி மாநில முதல்வர் என்.ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கடந்த 30.12.2011ல் புதுச்சேரியில் இதுவரை யாரும் கண்டிராத பேரழிவை தானே புயல் ஏற்படுத்தியது. 5 நாட்களுக்கு முன்பே 140 கி.மீ வேகத்தில் புதுச்சேரியை தாக்கும் என்பதை அறிந்தும் அதனை எதிர்க்கொள்ளும் அளவுக்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுக்கவில்லை.
புதுச்சேரி முதல்வர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கான உத்தரவுகளை பிறப்பித்த போதிலும், அரசு இயந்திரம் புயல் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்யவில்லை. புயலை எதிர்க்கொள்ள தேவையான அவசர நிதி கூட தயார் நிலையில் இல்லை.
புதுச்சேரியில் இருந்த பழமையான மரங்கள் 75 விழுக்காடு வேரோடு சாய்ந்துவிட்டது. விவசாயம் முற்றிலும் சீரழிந்து விட்டது. குடியிப்பு பகுதி, தொழிற்சாலைகள் உள்பட அனைத்து கட்டுமானங்களும் கடுமையாக சேதமடைந்தது உள்ளது. 90 விழுக்காடு தொழிற்சாலைகள் இயங்காமல் உள்ளன.
எனவே இயற்கையால் சீரழிந்த இயற்கை பேரிடர் பகுதியாக புதுச்சேரியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தானே புயல் பாதிப்பை மதிப்பீடு செய்ய மத்திய அரசு இயற்கை பேரிடர் மதிப்பீட்டுக் குழுவை புதுச் சேரிக்கு விரைந்து அனுப்ப வேண்டும்.
மாநில அரசின் நிதி நெருக்கடி, மக்களின் மறுவாழ்வு நடவடிக்கையின் அவசர தன்மை கருதி மாநில அரசு அளித்துள்ள ரூ2,500 கோடி சேதார மதிப்பீட்டில் 50 விழுக்காடு நிதியை முன்தொகையாக உடனே வழங்க வேண்டும். புயலால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்ட, தற்போது எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் மாநிலத்திற்கு தேவையான நிவாரணத் தொகை வாங்கிட உதவி செய்ய வேண்டும். எனவே மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி முழு நிவாரணத் தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications