சசிகலா ஆதரவு...கல்தாவுக்கு ரெடியாகும் 15 அமைச்சர்கள்?
சென்னை: அமைச்சரவை மாற்றப் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா தயாரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் திறமையற்றவர்கள் எனக் கருதப்படும் 15 அமைச்சர்கள் விரைவில் மாற்றப்படுவர் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நீக்கம் இப்போதைக்கு இருக்காது என்றும் அதேசமயம், நீண்ட தாமதமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கூண்டோடு நீக்கி விட்டார் ஜெயலலலிதா. அவரது ஆதரவு அதிகாரிகளும் கூட இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர்.
இது போக சசிகலா ஆதரவு கட்சிக்காரர்களும் கூட கட்சிப் பொறுப்புகளிலிருந்து தூக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் சசிகலா ஆதரவு அமைச்சர்கள் மட்டும் இதுவரை தீண்டப்படாமல் இருக்கின்றனர். இது பலரையும் குழப்பி வருகிறது.
ஆனால் இதற்குப் பின்னணியாக ஒன்றைச் சொல்கிறார்கள். ஆளுநரிடமிருந்து ஜெயலலிதாவுக்குப் போன ஒரு அறிவுறுத்தல்தான் இந்தத் தாமதத்திற்குக் காரணமாம். அதாவது அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவதைத் தவிருங்கள். அது ஆட்சிக்கும், உங்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும். மேலும் ஆட்சி ஸ்திரமில்லாமல் இருக்கிறது என்ற பெரும் அவப் பெயரை ஏற்படுத்தி விடும் என்று ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அட்வைஸ் செய்துள்ளார் என்கிறார்கள்.
இதனால்தான் சசிகலாவை நீக்கிய கையோடு அமைச்சர்களையும் தூக்குவதாக இருந்த முடிவை ஜெயலலிதா தள்ளி வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.
இருப்பினும் நீக்கப்படப் போகும் அமைச்சர்களின் பட்டியல் தயாராக இருப்பதாக தெரிகிறது. அதில் 11 பேர் சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரால் பதவிக்கு வந்தவர்களாம். இவர்களில் பலரும் பெரும் பணம் கொடுத்து அமைச்சர் பதவியைப் பிடித்தவர்கள் என்கிறார்கள். மேலும் 4 அமைச்சர்களும் இப்பட்டியலில் உள்ளனர். இவர்கள் சசிகலா தரப்பைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இவர்களின் பணித்திறமை குறித்து திருப்தி இல்லாததால் இவர்களையும் மாற்றி விட முதல்வர் தீர்மானித்துள்ளாராம்.
15 பேரையும் நீக்கி விட்டு முற்றிலும் திறமையான, யாருடைய கோஷ்டியையும் சேராத அமைச்சர்களை நியமிக்க முடிவு செய்துள்ளார் முதல்வர் என்கிறார்கள் கார்டனுக்கு நெருக்கமானவர்கள்.
பொறுமையாக செயல்படுங்கள் என்று ஆளுநர் அறிவுரை கூறியுள்ள போதிலும் கூட, பொங்கலுக்குப் பிறகு மீண்டும் ஒரு தீபாவளியை தமிழகம் காணும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறுகிறது கோட்டை வட்டாரத் தகவல்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications