பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

தமிழ்நாடு அரசு சமீபத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இந்த கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி உள்ளிட்ட 5 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் வாசுகி, சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறியுள்ளதாவது,
கடந்த 2001ம் ஆண்டிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதன்பிறகு டீசல் விலை 137 சதவிகிதமும், உதிரி பாகங்களின் விலை 180 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 6,154 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகாவில் அதிகம்
இந்த இடைப்பட்ட காலத்தில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தாலும் அண்டை மாநிலங்களை விட குறைவுதான். ஆகவே தவிர்க்க முடியாமல் உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது எனவும் தமிழ்நாடு அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications