நக்கீரன் கோபால் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு-அட்வகேட் ஜெனரல்
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் மீது கோர்ட் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளதாக தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இத்தகவலை அவர் தெரிவித்தார்.at
அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் உள்பட பலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல நக்கீரன் கொடுத்த புகாரின் பேரில் அதிமுக எம்.எல்.ஏ. அசோக் உள்ளிட்டோர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கோபாலும், காமராஜும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இந்த மனுக்கள் எல்லாம் இன்று விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, நக்கீரன் அலுவலகத்திற்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி கோபால் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இதை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நேற்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி கே.பி.கே.வாசுகி ஆகியோர் முன்னிலையில் ஆஜராகி கோபாலின் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் வாதிட்டு கோரிக்கை விடுத்தார்.
அப்போது ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் எழுந்து, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக நக்கீரன் பத்திரிகை தொடர்ந்து அவதூறு செய்தி வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவைப் பற்றி தனிப்பட்ட செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு அவரிடம் கருத்து கேட்கவேண்டும் என்று 2006-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை நக்கீரன் கோபால் மீறியுள்ளார். எனவே அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறோம். அந்த வழக்கையும் விரைவாக விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதுபற்றியும் மனுவை தாக்கல் செய்தால் அதையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். இந்த வழக்கும் இன்றைக்கே விசாரணைக்கு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications