தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தை சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து திரிகோண மலைக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கறைபேட்டையை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது மனிதாபிமானம் இன்றி குண்டுகளை வீசி தாக்கி உள்ளனர். ஆனால் இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, திரிகோண மலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+