பசுபதி பாண்டியனைக் கொன்ற 'கோழி' அருள் சென்னையில்.. அமுக்கிப் பிடிக்க போலீஸ் தீவிரம்!
சென்னை: பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி கோழி அருள் சென்னையில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்நது தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர். அவரைப் பிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேசமயம், பெங்களூருக்கும் ஒரு குழு பறந்துள்ளது.
திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியன் கொலை வழக்கில், சுபாஷ் பண்ணையார் உள்பட 14 பேருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில், 3 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் கேரளா, மும்பை, சென்னை, பெங்களூர் என பல்வேறு பகுதிகளில் பதுங்கியுள்ளதாக தெரிகிறது.அவர்களைப் பிடிக்க கிட்டத்தட்ட 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்களில் கோழி அருள் என்பவர் சென்னையில் பதுங்கியிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதேசமயம், அவர் பெங்களூரில் இருப்பதாகவும் இன்னொரு தகவல் வந்துள்ளது. இதையடுத்து இரு ஊர்களுக்கும் தனிப்படைகள் விரைந்துள்ளன.
கோழி அருள் தப்பி விடாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். சென்னையில் அவர் பதுங்கியிருப்பதாக கருதப்படும் பகுதிகளில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications