உங்களுக்காக கேரளாவைப் பகைக்க முடியாது-தமிழக இளைஞர் காங். பொறுப்பாளரின் 'பொறுப்பான' பேச்சு!

தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக கட்சி மேலிடம் கேரளாவைச் சேர்ந்தவரான அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் லிஜூவை நியமித்துள்ளது. இதற்கு தமிழக இளைஞர் காங்கிரஸார் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியது. இருப்பினும் அதை காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று நடந்த இளைஞர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் லிஜு கலந்து கொண்டார். அவரை மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா உள்ளிட்டோர் சிறப்பாக வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் சத்தியமூர்த்தி பவனில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் லிஜு கலந்து கொண்டார். அதன் பிறகு வழக்கம் போல சத்தம், அமளி, துமளிகள், குற்றங்கள், கூப்பாடுகளுடன் கூட்டம் நடந்தது.
கூட்டத்தின் இடையே ஒரு நிர்வாகி எழுந்து, கூடங்குளம் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்துப் பேசினார். முல்லைப் பெரியாறு அணை குறித்த போராட்டத்தை இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்த வேண்டும். அதற்கு லிஜு தலைமை தாங்க வேண்டும் என்றார்.
அதைக் கேட்டதும் சட்டென்று எழுந்த லிஜு,முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உங்கள் நிலைப்பாடு போராட்டமாக இருந்தால், அதை நடத்துங்கள். ஆனால் போராட்டத்திற்கு நான் தலைமை வகிக்க முடியாது. அது, கேரள மாநில அரசியலில் எனக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்றார்.
இப்படியாக கூட்டம் முடிந்தது. கூட்டத்தில் ஆக்கப்பூர்வமாக எதுவும் பேசப்படவில்லை, முடிவு செய்யப்படவில்லை, ஒரு தீர்மானம் கூட போடப்படவில்லை. மாறாக, ஒருவர் மாற்றி ஒருவர் மற்றவர்கள் மீ்து குற்றம் சாட்டியபடியே இருந்தனர்.
'பிங்கர் ஆன் தி லிப்ஸ்'
இடையில் சத்தம் அதிகமானது. அப்போது பள்ளிக்கூடங்களில் வகுப்புகளில் மாணவர்கள் கய்யா முய்யாவென்று சத்தம் போடும்போது கையில் குச்சியுடன் ஹெட்மாஸ்டர் வந்து சைலன்ஸ் என்று பேசி எச்சரித்து விட்டுச் செல்வாரே, அதேபோல மாநில தலைவர் ஞானதேசிகன் கூட்டம் நடந்த அரங்குக்குள் நுழைந்தார்.உள்ளே வந்தவர், சண்டை போடும் இடம் சத்தியமூர்த்திபவன் இல்லை. அய்யோ, குய்யோ வென்று என யாரும் கத்தி பேசக் கூடாது. அப்படி உங்கள் பிரச்னை பற்றி பேச வேண்டும் என்றால், வெளியே போய் பேசுங்கள். நான் ராகுலிடம் சொல்லி விடுவேன் என்று 'பிங்கர் ஆன் தி லிப்ஸ்' என்று டீச்சர்கள் சொல்வது போல கண்டிப்புடன் சொல்லி விட்டுப் போனார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications