2ஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு- அதிர்ச்சியில் காங்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 3 அதிரடித் தீர்ப்புகளால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி, தீர்ப்பை நாங்கள் முழுமையாக ஆராய வேண்டும். தீர்ப்பை முழுமையாக படித்த பிறகுதான் எந்த கருத்தையும் கூற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ரஷித் ஆல்வி, 2ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை மதிக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி எதுவும் கூறவில்லை. 2ஜி அலைக்கற்றை பெற்ற நிறுவனங்களின் உரிமம் மட்டுமே ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக படிக்காமல் கருத்து எதனையும் கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications