போலீஸ் காவல் முடிந்தது.. ராவணன் மீண்டும் சிறையில் அடைப்பு
சென்னை: மணல் குவாரி வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலாவின் உறவினர் ராவணன் 2 நாள் போலீஸ் காவலில் விசாரணை முடிவடைந்ததையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரில், கரூரில் மணல் குவாரி லைசென்ஸ் வாங்கி தருவதாக கூறி ராவணன் மற்றும் அவருடைய உதவியாளர்கள் என்னிடம் இருந்து ரூ.1 கோடி பெற்றனர். ஆனால் எனக்கு லைசென்ஸ் பெற்று தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது அவர்கள் என்னை மிரட்டினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 3ம் தேதி ராவணனைக் கைது செய்து சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ஆலந்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுதது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது தனக்கு திடீரென்று மயக்கம் வருவதாக ராவணன் கூறினார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பரிசோதனைக்கு பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந் நிலையில், 2 நாள் போலீஸ் காவல் முடிந்து நேற்று மாலை 3.30 மணிக்கு ராவணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம் நீதிபதி, போலீஸ் காவலின் போது உணவு வழங்கப்பட்டதா?'' என்று கேட்டார் உணவு வழங்கினார்கள்'' என்று ராவணன் பதிலளித்தார்.
மருத்துவ வசதி தரப்பட்டதா?'' என்ற கேள்விக்கு, வழங்கப்பட்டது'' என்றார். போலீஸ் காவலில் சித்ரவதை செய்தார்களா?'' என்ற கேள்விக்கு இல்லை'' என்று பதிலளித்தார்.
இதையடுத்து ராவணனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ராவணன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications