அணு உலை நோக்கி யாத்திரை: இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது!
நெல்லை: கூடங்குளம் அணு உலையை திறக்க வலியுறுத்தி நெல்லையிலிருந்து கூடங்குளம் நோக்கி பாதயாத்திரை செல்ல முயன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது செய்யப்பட்டார்.
கூடங்குளம் அணு உலையை திறக்க வலியுறுத்தி நெல்லையிலிருந்து கூடங்குளம் நோக்கி பாதயாத்திரை செல்லப் போவதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா அறிவித்திருந்தார். பின்பு பாதாத்திரை வள்ளியூரிலிருந்து தொடங்கும் என அறிவித்தார். ஆனால், போலீசார், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராதாபுரம் வரை அனுமதி மட்டுமே கொடுத்திருந்தனர். அதற்கு மேல் செல்ல தடை விதித்தனர்.
இந்த நிலையில், யுவராஜா தலைமையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் வள்ளியூரிலிருந்து பாத யாத்திரையாக சென்றனர். ராதாபுரம் வந்ததும், அங்கிருந்து கூடங்குளம் நோக்கி செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதி மறுத்து, அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications