ஆப்பிரிக்காவில் மேலும் புதிய கிளைகள்: பாங்க் ஆஃப் பரோடா திட்டம்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: பேங்க் ஆஃப் பரோடா நிறுவனம் தனது சேவையை ஆப்பிரிக்கா நாட்டில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் எதிர்வரும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் 10 கிளைகளைத் திறக்கவும் பேங்க் ஆஃப் பரோடா திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக வங்கியின் மேலாளர் மல்லையா செய்தியாளர்களிடம் கூறுகையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் பாங்க் ஆஃப் பரோடா நிறுவனம் வலுவாக காலூன்றி உள்ளது. அந்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு உள்ளூர் வங்கியைப் போல்தான் எங்களை மக்கள் கருதுகின்றனர். இதையடுத்தே எதிர்வரும் நாட்களில் எங்களது சேவையை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications