புறநகர்களில் வைமேக்ஸ் இணைப்பு- பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது

Subscribe to Oneindia Tamil

Bsnl
சென்னை: சென்னை பிஎஸ்என்எல் தொலைபேசியின் டேடா ஒன் இணைய இணைப்பை கேபிள்கள் மூலம் வழங்க முடியாத புறநகர் பகுதிகளில் வைமேக்ஸ் போன்ற 4-ம் தலைமுறை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை தொலைபேசியின் தலைமை மேலாளர் ஏ.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையின் 15 புறநகர் பகுதிகளில் 4-ம் தலைமுறை தொழில்நுட்பமான வைமேக்ஸ் மூலம் இணைய இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்கான டவர்களை 15 இடங்களில் அமைத்துள்ளோம்.

டவர்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து 10 முதல் 15 கிலோ சுற்றளவுக்கு வைமேக்ஸ் இணைய இணைப்பு கிடைக்கும்.

256Kbps முதல் 2Mbps வரையிலான வேகத்துடன் இந்த வைமேக்ஸ் இணைய இணைப்பு டிவைஸ்கள் வழங்கப்படுகிறது.

4-ம் தலைமுறை தொழில்நுட்பமென்பதால் கூடுதலான இடங்களுக்கு இணைய வசதி கிடைக்கும்.

உத்திரமேரூர், செங்கல்பட்டு, அண்ணா நகர், மறைமலைநகர், கும்மிடிப்பூண்டி சிப்காட், கேளம்பாக்கம், திருவள்ளூர், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், மணலி புதுநகர், மேல்மருவத்தூர், மதுராந்தகம்,திருக்கழுக்குன்றம, மேடவாக்கம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு வைமேக்ஸ் இணைப்பு வழங்கப்படுகிறது.

இதற்கு முன்னோட்டமாக திருவள்ளூரின் ஊத்துக்கோட்டையில் ஓராண்டுக்கு முன்பாக வைமேக்ஸ் தொழில்நுட்ப்ம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் வைமேக்ஸ் சேவையை பயன்படுத்திக் கொள்வதற்காக புதிய சலுகைகள் கொண்ட திட்டங்களையும் வெளியிடுகிறோம்.

வைமேக்ஸ் டவர்கள் அமைக்கப்பட்ட இடத்திலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்போர் யூஎஸ்பி மூலமே இணைய இணைப்பைப் பெற்றுவிட முடியும். என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+