மரக்காணம் அருகே பஸ் மேற்கூரையில் பயணித்த +1 மாணவர் கீழே விழுந்து பலி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணித்த பிளஸ் 1 மாணவர் தலையில் வயர் தட்டி கீழே விழுந்து பலியானார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவரின் மகன் சரவண குமார் (17). மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்காக மரக்காணம் பேருந்து நிலையத்திற்கு சென்றார்.
அப்போது ஆலத்தூர் செல்லும் பேருந்து வந்தது. அதில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சரவண குமார் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்தார். அவருடன் 20க்கும் அதிகமான மாணவர்களும் மேற்கூரையில் அமர்ந்தனர். பேருந்து அங்கிருந்து கிளம்பி வேகமாகச் சென்றது. சிறிது தூரம் சென்றதும் கேபிள் வயர் வருவதைப் பார்த்த மற்ற மாணவர்கள் தலையைக் குனிந்து கொண்டனர். அதை கவனிக்காத சரவண குமார் தலையில் வயர் பட்டு அவர் மேற்கூரையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை சிகிச்சைக்காக ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications