திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடையை சூறையாடிய கொள்ளையர்கள்-45 கிலோ நகைகள் பறிபோயின!
திருப்பூர்: திருப்பூரில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் ஓட்டை போட்டு நுழைந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த ரூ. 14 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றதால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்புதான் திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தது ஒரு கும்பல். இந்த நிலையில் தற்போது அதே திருப்பூரில் ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் ரூ. 14 கோடி மதிப்புள்ள 45 கிலோ தங்க மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் நேற்று நள்ளிரவு ஒரு கும்பல் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே புகுந்தது. பின்னர் கடையில் இருந்த ரூ. 14 கோடி மதிப்புள்ள 45 கிலோ தங்க, வைர நகைகளை சுருட்டிக் கொண்டு தப்பி விட்டனர். கடையில் இருந்த அத்தனை நகைகளையும் திருடர்கள் திருடிச் சென்று விட்டனர்.
இந்த நகைகளில் 3 கிலோ வைர நகைகளும் அடக்கம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கடையையே கொள்ளையர்கள் சூறையாடி விட்டதால் கடை உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications