திருமணத்திற்குச் சென்றவர்களின் கார் மீது அரசு பஸ் மோதியதில் 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஆலங்குளம்: திருமணத்திற்குச் சென்றவர்கள் பயணித்த கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் என்ற இடத்தில் இந்த கோர விபத்து இன்று மாலை நடந்தது.
சீவநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நெல்லைக்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தனர். கல்யாணத்தை முடித்து விட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது தென்காசி அருகே ஆலங்குளம் என்ற இடத்தில் அவர்கள் வந்த கார் மீது அரசுப் பேருந்து மோதியது.
இதில் அக்குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications