ஜெயலலிதாவின் சாதனையை சொல்லி சங்கரன்கோவிலில் ஓட்டு கேளுங்கள்-ஓ.பன்னீர்செல்வம்
கோவில்பட்டி: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது,
நாம் தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். எங்கு சென்றாலும் 2 காருக்கு மேல் ஊர்வலமாக செல்லக் கூடாது. கடந்த கால திமுக குடும்ப ஆட்சியின் அவலங்களையும், ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகியவற்றையும், கடந்த 8 மாத ஜெயலலிதா ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மூலம் செய்யப்பட்ட சாதனைகளையும் கூறி ஓட்டு கேட்க வேண்டும்.
தமிழகத்தை உலக வரைபடத்தில் இடம் பெறச் செய்யும் அளவிற்கு முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி நடக்கின்றது. கடந்த சட்டசபைத் தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். உள்ளாட்சித் தேர்தலிலும், தற்போதும் தனித்து போட்டியிடுகிறோம். எனவே கட்சியினர் கடுமையாக உழைத்து நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தூர்பாண்டியன், செல்லப்பாண்டியன், ராஜேந்திர பாலாஜி, வேட்பாளர் முத்துச்செல்வி, தேர்தல் பொறுப்பாளர்கள் உள்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications