வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி - சென்னை நபர் கைது
சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் இருந்து சுமார் ரூ.40 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அடையாறு காந்தி நகரை சேர்ந்த லியோ ஆண்டனி ஜோசப்(45). கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் லியோ கன்சல்டன்ட என்ற நிறுவனம் மூலம் பலரையும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக விளம்பரம் செய்தார்.
இதனை நம்பிய பலரும் இந்நிறுவனத்தில் வெளிநாடு செல்வதற்காக பணம் கட்டி ஏமாந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் ஆலந்தூரை சேர்ந்த திராவிடமணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், கீழ்ப்பாக்கம் போலீசார் லீயோ ஆண்டனி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இத்தகவலை அறிந்த லியோ ஆண்டனி, தனது அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் ஆண்டனியின் ஆசை வார்த்தையில் ஏமாந்தவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பணத்தை, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திரும்ப கொடுத்துவிடுவதாக லியோ ஆண்டனி நீதிமன்றத்தில் தெரிவித்தார். எனவே நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் லியோ ஆண்டனி கொடுக்கப்பட்ட காலகெடு கடந்தும் யாருக்கும் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.
இது குறித்து எண்ணூரைச் சேர்ந்த கே.அன்வர் ஷா என்பவர் அளித்த புகாரின் பேரில் லியோ ஆண்டனி மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கீழ்ப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் கே.ராஜாராம் தலைமையிலான தனிப்படை போலீசார், லியோ ஆண்டனியை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில், லியோ ஆண்டனி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், மொத்தம் 70 பேரிடம் இருந்து ரூ.40 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications