அஸ்ஸாம் முதல்வரை துணை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் முடிவு?
டெல்லி: தற்போதைய குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் அசாம் மாநிலத்தில் மூன்றாவது முறையாக முதல்வராக பதவி வகித்து வரும் கோகாயை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் இது குறித்து கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தருண் கோகாய் தேர்ந்தெடுக்கப்பட்டால் வடகிழக்கு இந்தியாவில் இருந்து உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்நபர் என்ற பெருமையை பெறக்கூடும்.
அசாம் முதல்வர் கோகாய், ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1991-93-ம் ஆண்டுகளில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் தனிப்பொறுப்புடன் கூடிய உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
2001-ம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தி்ன் முதல்வராக பதவி வகித்துளளார் தொடர்ந்து 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தல்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கிறார்.
தற்போது துணை குடியரசுத் தலைவர் பதவி வகி்த்து வரும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications