உக்ரைன் நாட்டு கருவி மூலம் விவிஐபிக்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்டாரா ராணுவ தளபதி?

Subscribe to Oneindia Tamil

Off the Air Interception
டெல்லி: காஷ்மீரிலும் வட கிழக்குப் பகுதிகளிலும் தீவிரவாதிகளுக்கு இடையே நடக்கும் தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக ஒட்டு கேட்பதற்காக வாங்கப்பட்ட அதிநவீன கருவிகளை (off-the-air interceptors), டெல்லியில் பொறுத்தி மத்திய அரசின் முக்கிய அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்களை ராணுவத் தளபதி வி.கே.சிங் ஒட்டு கேட்டதாக பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.

வயது பிரச்சனை காரணமாக, வி.கே.சிங் ஓய்வு பெறும் தேதி குறித்து சிக்கல் எழுந்தது. இதையடுத்து அவருக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இப்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந் நிலையில், வரும் மே மாதம் புதிய ராணுவத் தளபதி பொறுப்பேற்பார் என மத்திய அரசு அறிவித்துவிட்டது.

இதற்கிடையே, வி.கே.சிங் மீது சில பரபரப்பான புகார்கள் கிளம்பியுள்ளன. அதில் முக்கியமானது ரகசிய தொலைபேசி ஒட்டுகேட்பு. தீவிரவாதிகள் இடையிலான செல்போன் உரையாடல்களை ஒட்டு கேட்க உக்ரைன் நாட்டிலிருந்து ராணுவம் வாங்கிய இரு கருவிகளை காஷ்மீர், வட கிழக்குப் பகுதிகளில் பயன்படுத்தாமல், அதை டெல்லியில் பொறுத்தி, மத்திய அரசில் உள்ள முக்கிய நபர்களின் உரையாடல்களை சிங் கண்காணித்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்தக் கருவிகளை வாகனங்களில் பொறுத்திக் கொள்ள முடியும். இதன்மூலம் அந்த வாகனத்தைச் சுற்றிய 3 கி.மீ. தூர பரப்பளவில் நடக்கும் தொலைபேசி உரையாடர்கள் அனைத்தையும் ஒட்டு கேட்க முடியும். டெல்லியில் சில வாகனங்களில் இதைப் பொறுத்தி விவிஐபிக்கள் பகுதியில் நடமாடவிட்டு, அவர்களது தொலைபேசி உரையாடல்களை ராணுவம் ஒட்டு கேட்டதாக இந்த புகார் கூறுகிறது.

மேலும் டெல்லி ராணுவ தலைமையகத்தில் புதிதாக ஒரு ரகசிய பிரிவை சிங் உருவாக்கியுள்ளதாகவும், இந்தப் பிரிவின் முக்கிய பணி மத்திய அரசின் முக்கிய பிரமுகர்களின் உரையாடல்களை ஒட்டு கேட்பது தான் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புகார் குறித்து மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

விதிகளின்படி இப்படி ஒரு பிரிவே இருந்திருக்கக் கூடாது என்றும், ஆனால் தன்னிச்சையாக இந்தப் பிரிவை உருவாக்கி அதில் ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த (வி.கே.சிங் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர் தான்) அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வரம்பை மீறிய அதிகாரத்தை சிங் தந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்தப் பிரிவினர் தான் off-the-air interceptor கருவிகளை டெல்லியில் பொறுத்தி விவிஐபிக்களின் உரையாடல்களை கண்காணித்து வந்ததாகவும் தெரிகிறது. மேலும் ராணுவத்தின் ராஜ்புத் இனத்தினருக்கே மிக மிக முக்கிய பதவிகளை சிங் அள்ளித் தந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+