5 லட்சம் 'ஆதரவாளர்களைத்' தாண்டியது மோடியின் ட்விட்டர்!

கடந்த 2009ம் ஆண்டு ட்விட்டருக்குள் புகுந்தார் மோடி. தொடர்ந்து அதில் பல்வேறு செய்திகளை, கருத்துக்களை ட்விட் செய்து வருகிறார். இப்போது அவரது ஆதரவாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இந்திய அரசியல்வாதிகளிலேயே அதிக அளவிலான ட்விட்டர் ஆதரவாளர்களை வைத்திருப்பது இப்போதைக்கு மோடி மட்டுமே.
அதை விட ஆச்சரியமானது என்னவென்றால், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளராகும் கனவுடன் களத்தில் நிற்கும் மிட் ரோம்னி, ரிக் சான்டோரம் ஆகியோரை விட மோடிக்கே அதிக அளவிலான ட்விட்டர் ஆதரவாளர்கள் உள்ளனர் என்பது.
4 லட்சம் ஆதரவாளர்கள் வந்தவுடனேயே சாதாரண மக்களுடனும் ட்விட்டர் மூலம் தொடர்பு கொள்ள ஆரம்பித்தார் மோடி. இதன் மூலம் சாமானிய மக்களும் கூட மோடியை எளிதில், நேரடியாக தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. சாமானிய மக்கள் தரும் கருத்துக்கள், யோசனைகளை ஏற்று அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளிக்கிறார் மோடி.
இந்த ஆண்டை குஜராத் அரசு, சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு பிறந்த ஆண்டையொட்டி இளைஞர் சக்தி ஆண்டாக கடைப்பிடிக்கிறது. இதையொட்டி இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் வகையிலான வாசகங்களை தினசரி ட்விட் செய்து வருகிறார் மோடி. அவை அனைத்துமே விவேகானந்தரின் அருள்மொழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம்தான் நரேந்திர மோடியின் இணையதளம் புதுப் பொலிவுடன் புழக்கத்திற்கு வந்தது. பல புதிய அம்சங்களுடன் இந்த இணையதளம் மக்களை வசீகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் மோடியின் ட்விட்டர் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications