சங்கரன்கோவில்: ஜெயலலிதா பிரசாரத்தில் மாற்றம்-13ம் தேதிக்குப் பதில் 14ம் தேதி பிரசாரம்!

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: இடைத்தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வரும் 13ம் தேதி சங்கரன்கோவில் தொகுதியில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது ஒரு நாள் தள்ளிப் போய் 14ம் தேதி பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் செய்யவுள்ளார்.

அவர் 13ம் தேதி சங்கரன்கோவிலுக்கு வருவதாக இருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 13ம் தேதிக்குப் பதில் 14ம் தேதி அவர் பிரசாரம் செய்யவுள்ளார்.

திருவேங்கடம் பஜார், குருவிகுளம், மலையான்குளம் விலக்கு, சண்முகநல்லூர் விலக்கு, குருக்கள்பட்டி, பனவடலி சத்திரம் பஸ் ஸ்டாப், வன்னிகோனேந்தல், தேவர்குளம் மெயின் ரோடு உள்பட 10 இடங்களில் ஜெயலலிதா பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+