தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது- கூடங்குளம் குறித்து முக்கிய விவாதம்!

2012-2013-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா துறை வாரியாக ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில், துறை வாரியான திட்டங்கள், அவற்றிற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 10.15 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூடியது. சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்திற்கு கிட்டத்தட்ட அத்தனை அமைச்சர்களுமே அங்கு போயிருந்தனர். அவர்கள் அத்தனை பேருமே இன்றுகாலை அமைச்சரவைக் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
இன்றைய கூட்டத்தில் மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுவதாக தெரிகிறது. கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம், தமிழக மின்நிலவரம், பட்ஜெட் ஆகியவையே அது.
கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக இனியன் தலைமையிலான குழு தமிழக அரசிடம் ஏற்கனவே தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதுகுறித்தும் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
அதேபோல தமிழகத்தை வாட்டி வரும் மின் பற்றாக்குறை, மின்தடை குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.
மேலும் தமிழக அரசின் பட்ஜெட் குறித்தும் முக்கிய விவாதம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications