சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரிக்கும் அரசியல் கட்சிகள்
சங்கரன்கோவில்: இடைத்தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது சங்கரன்கோவிலில் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒட்டு மொத்த தமிழகத்தையே சங்கரன்கோவில் இடைத்தேர்தல் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அமைச்சர்கள் அனைவரும் தலைமைச் செயலகத்தை விட்டுவி்ட்டு சங்கரன்கோவிலில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் மக்கள் தேடிப் போன அவல நிலை இருந்த தமிழகத்தில் இடைத்தேர்தல்கள் மூலம் அவர்கள் மக்களை தேடி ஒடி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அக்னி வெயில் கந்தக பூமியி்ல் அனல் பறக்க சங்கரன்கோவி்ல் தொகுதியில் அதிமுக, மதிமுக, திமுக, தேமுதிகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய பகுதிகளில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், நகராட்சி பகுதியில் மதிமுக வேட்பாளர் சதன் திரு்மலைகுமாரும், அதி்முக வேட்பாளர் முத்துசெல்விக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் உடலில் எம்ஜிஆர், முதல்வர் ஜெயலலிதா இரட்டை இலை சின்னம் வரைந்து அனல் பறக்கும் வெயிலில் அனைத்து தரப்பினரிடமும் ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.
தேமுதிக வேட்பாளர் முத்துகுமாருக்கு ஆதரவாக விஜயகாந்தின் மைந்துனரும், தேமுதிகவின் மாநில இளைஞரணி செயலாளருமான சுதீஷ் பனவடலிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications