5 மாநில தேர்தல் முடிவுகள்: அன்னா குழுவால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் மணிப்பூரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் ஆளும் கோவா பாஜகவுக்கு கிடைத்துள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தர்கண்டில் கடந்த சட்டசபை தேர்தலைவிட இந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்துள்ளது அல்லது இருக்கும் இடங்களை தக்க வைத்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரியானா மாநிலம் ஹிஸாரில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தது. இதையடுத்து சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே மற்றும் அவரது குழுவினர் செய்த பிரச்சாரத்தின் விளைவாகவே காங்கிரஸ் படுதோல்வியடைந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப் போவதாக அன்னா அறிவித்தார். ஆனால் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவருக்குப் பதில் அவரது குழுவினர் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்.
ஹிஸாரைப் போன்று 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் என்று அன்னா குழுவினர் தெரிவித்திருந்தனர். இருப்பினும் எந்தக் கட்சிக்கும் அன்னா குழுவினரால் பாதிப்பு ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இந்து ஐந்து மாநிலத் தேர்தல் பெரும் தோல்விதான் என்றாலும் கூட கடந்த தேர்தலில் வாங்கியதை விட கூடுதல் இடங்களையே உ.பியிலும் உத்தர்கண்டிலும் பஞ்சாபிலும் பெற்றுள்ளது.
இதனால் அன்னா குழுவினரின் பிரசாரத்தை மக்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது உறுதிதாகியுள்ளது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications