2016-ல் தமிழகத்தில் வன்னியர் ஆட்சிதான் அமையும் -எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது: ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
வன்னியர்கள் தி.மு.க., - அ.தி.மு.க., பின்னால் இருக்க கூடாது. இந்த கட்சிகளை வேரறுக்க வேண்டும். 2016ல், வன்னியர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். ஓட்டுப் போடும் ஜென்மங்களாக நம்மை வைத்திருந்தது போதும். நாம் வாழ குலக்கொடியை உயர்த்தி பிடிப்போம். அதுவரை உறக்கம் இல்லை; ஓய்வு இல்லை.
15, 18 வயதுடைய எல்லோரும் மாமல்லபுரம் வர வேண்டும். பா.ம.க.,வில் சேர்ந்து மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும்.எங்களுக்கு வேறு யாரும் தலைவர்கள் கிடையாது. எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் தலைவர்களாக இருக்க முடியும்.
திராவிடக் கட்சிகளின் இலவசம்
திராவிட கட்சிகள் இலவசத்தையும், சினிமாவையும், சாராயக் கடையையும் தான் தந்தனர். கழகங்களின் மாய்மாலம் இனி மேலும் செல்லாது. நான்கு ஆட்டு குட்டியை கொடுத்து வளர்த்து கொள்ள சொன்னால், அது வளர்ந்து உடனே நகைக் கடையும், துணிக் கடையும், ஓட்டலும் நடத்தும் அளவிற்கு உயர்ந்து விடுவர் என ஏமாற்றுகின்றனர்.
ஓடிவாருங்கள் வன்னியர்களே!
1980களில் வன்னியர்கள் கண்ணை மூடிக்கொண்டு வந்ததை போல், இப்போது தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட்டு, என் பின்னால் வர வேண்டிய நேரம் வந்து விட்டது.எல்லோரும் ஓடி வாருங்கள்; 2016ல் கழகங்களை மூட்டை கட்டி போடப் போகிறோம். அவர்களை வீட்டுக்கு அனுப்ப போகிறோம். புதிய அத்தியாயம், புதிய அரசியல், புதிய பாதை, புதிய நம்பிக்கையை வன்னியர்களுக்கு மட்டும் அல்லாமல் தமிழக மக்களுக்கும் சொல்கிறோம். மானம், ரோஷம், சூடு, சொரணை அதிகம் உள்ளவர்கள் யார்? நீங்களே பதில் சொல்லுங்கள். இவர்கள் எல்லாம் மற்ற கட்சியிலா இருக்க வேண்டும்.
விழுப்புரத்தில் ஒருவன் கேட்கிறான்
ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டமாக இருந்த போது நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தியும், உங்கள் ஊர்காரரும் (செஞ்சியார்) சந்து பொந்து, மூளை முடுக்கெல்லாம் சென்று தி.மு.க.,வை வளர்த்தனர்.இப்போது விழுப்புரத்தில் ஒருவன் கேட்கிறான் (பொன்முடியை மறைமுகமாக குறிப்பிட்டு) உங்கள் ஊர்காரரை யார் என்று? அவர் யார் என்பதை நீங்கள் தான் ஞபாகப்படுத்த வேண்டும்.அடுத்தவர்களின் கொடியை பிடித்ததால் கோழைகளாக மாற்றப்பட்டோம். இப்போது நம்மை வெளிக்காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுவரை தமிழகத்தில் 30 முதல்வர்கள் இருந்தனர். 10 நாள் கூட ஒரு வன்னியர் முதல்வராக இருந்ததில்லை.
எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது....
இதுவரை வன்னியர்களுக்கு கழகங்களில் என்ன பதவியை கொடுத்தனர்; ஒன்றிய செயலர், சேர்மன், கவுன்சிலர், கிளை செயலர் பதவியைத் தவிர எதையும் கொடுக்கவில்லை. இதையெல்லாம் நான் வயிற்றெரிச்சலில் சொல்லவில்லை. 2016ல் வன்னியர் ஆட்சி மலரும்; அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இதை நோக்கி நம் பயணம் தொடரட்டும் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications