பெங்களூரில் கருப்புக் கண்ணாடியுடன் ஸ்டைலாக பவனி வந்த சசிகலா!

செம கெத்தாகத்தான் பெங்களூரில் கடந்த வாரம் சசி நீதிமன்றத்தில் ஆஜரானார். முதலில் அவர் செய்தது ஜெயலலிதா அனுப்பியிருந்த தமிழக உளவுத்துறையினருக்கு செக் வைத்ததுதான்!
வழக்கமாக சசி தங்கும் ஹோட்டலில் டேரா அடித்திருந்த தமிழக உளவுத்துறைக்கு தண்ணிகாட்டிவிட்டு மற்றொரு ஹோட்டலில் தங்கிவிட்டார் சசி. இருந்தாலும் தாம் தங்கக்கூடிய அட்ரியா ஹோட்டலிலும் தமது உறவுகளை தங்கவைத்து போலீஸுக்கு போக்குக் காட்டினார் சசி.
ஒரு நீதிபதியையும் அரசு வழக்கறிஞரையும் என்ன பாடுபடுத்த முடியுமோ அதன் உச்சத்துக்கே கடந்த வாரம் சசி சென்றுவிட்டார்.
ஒரு கட்டத்தில் நீதிபதியின் கேள்விகளுக்கு எழுதி வைத்த பதிலை படித்துக் கொண்டிருந்த சசிகலாவை பார்த்து "பிட் அடிக்கிறார்" ரேஞ்சுக்கு அரசு வழக்கறிஞர் சந்தேஷ் செளடா புகார் சொல்ல நீதிமன்றமே களேபரமாகி நீதிபதி எச்சரிக்கை விடுக்க வேண்டியதாயிற்று.
நாங்க எல்லாம் யாரு? எங்ககிட்டேவா? பாணியில் சசியும் அசராமல் பதிலுக்கு பொறிந்து தள்ளிவிட்டார்... தான் ஒரு குற்றவாளி அல்ல என்றும் தம் மீது குற்றம்தான் சாட்டப்பட்டிருக்கிறது என்றும் சப்தம் போட்டார்.
இம்முறையும் சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எந்த சம்பந்தமுமே இல்லை என்று கூறி போயஸ் தோட்டத்தை புல்லரிக்க வைத்தார்.
இதேபோல் கருப்புக் கண்ணாடி ஒன்றை அணிந்து கொண்டு சசி ஸ்டைலாக பவனி வந்ததும் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
பெங்களூர் நீதிமன்ற வழக்கு விவரங்கள், சசியுடன் இருக்கும் போயஸ் டீம் ஆகியவற்றை மோப்பம் பிடிக்கும் பத்திரிக்கையாளர்கள் இம்முறை ஏகத்துக்கும் டென்ஷன் காட்டியது சசி அண்ட் கோ.
போயஸ் டீம் ஆதிக்கம்:
ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்துக்கு நெருக்கமான வழக்கறிஞர்களான குமார், மணிசங்கர் மற்றும் செந்தில் ஆகியோரின் அனுமதியின்றி எந்த ஒரு பதிலையும் சசி சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புருவத்தை உயர்த்துதல், கண்ணசைத்தல், கைகளில் சைகை மூலம் பேசுதல் என அத்தனைவிதமான பாஷைகளிலும் போயஸ் தோட்டத்து வழக்கறிஞர்களிடம் உத்தரவுகளை வாங்கியபிறகே சசி பதில் கூறினார்.
நீதிபதி மல்லிகார்ஜூனையாவோ சசியிடம் எப்படியும் விரைவாக பதில் வாங்கிவிட துடியாக துடித்துப் பார்த்தார். ஏற்கெனவே தனது இழுத்தடிப்பு பதில்களால் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவையே கடுப்பாக்கி, அவர் நீதிமன்றத்துக்கு வருவதையே தவிர்க்க வைத்த சசி இந்த முறை அவரது ஜூனியர் சந்தேஷ் செளடாவையும் விட்டுவைக்கவில்லை. அவரையும் கடுப்பேற்றி்ப் பார்த்தார்.
சசிகலா வழக்கு விசாரணை ஒத்திவைப்பு:
இந் நிலையில் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கி மீதான விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக பெங்களூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை.
பெங்களூர் நீதிமன்றத்தில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள், போலீசார் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தினர். அந்த சம்பவம் நடந்தபோதும் உள்ளே சசிகலாவிடம் எந்தப் பிரச்சனையும் இன்று விசாரணையை நடத்தினார் நீதிபதி.
ஆனால் இந்தத் தாக்குதல்கள் காரணமாக அசாதாரண நிலை நிலவி வருவதாகவும், இதனால் தங்களால் நேரில் ஆஜராக முடியாது என்றும் இன்று சசிகலா தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி விசாரணையை 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
வழக்கை இழுத்தடிக்க என்னென்ன காரணம் சொல்றாங்கய்யா!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications