காங். தயவின்றி முலாயம் ஆட்சி-வழிக்குக் கொண்டு வர சொத்துக் குவிப்பு வழக்கை கையிலெடுக்குமா சி.பி.ஐ?

உத்தரப்பிரதேச தேர்தலில், சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. அம்மாநிலத்தின் முதல்வராக முலாயம்சிங் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முலாயம்சிங், அவரது மகன் அகிலேஷ், மருமகள் மனைவி டிம்பிள் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுத் தாக்கல் செய்தது.
காங். தயவில் தப்புதல்
ஆனால் 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தமது கட்சியின் 39 எம்.பிக்களின் ஆதரவைக் கொடுத்து மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் காப்பாற்றினார் முலாயம்சிங். இதற்குப் பிரதிபலனாக முலாயம்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு அப்படியே கிடப்பில்போடப்பட்டுவிட்டது.
இதையடுத்து 2008-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி , முலயாம் சிங் யாதவின் குடும்பத்தினர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக மனுவை வாபஸ் பெறுவதாக சி.பி.ஐ. மனு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அல்தமாஸ் கபீர், சிராக் ஜோசப் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் தேதிகுறிப்பிடாமல் ஒத்தி வைத்து. இதனால் வழக்கு அப்படியே இருந்தது.
தற்போது காங்கிரஸ் கட்சியின் தயவு முலாயம்சிங்க்குக்கு தேவையில்லை என்றாகி விட்டது. தனிப்பெரும்பான்மையுடன் முதல்வராகிறார் முலாயம். இருப்பினும் காங்கிரஸ் கட்சி தமக்கே உரித்தான பாணியில் முலாயம்சிங்கை எப்போதும் தங்களது ஆதரவுக் கையாக வைத்துக் கொள்ளும் வகையில் மீண்டும் சொத்துக் குவிப்பு வழக்கை கையில் எடுக்குமா? என்பதுதான் டெல்லி அரசியல்வட்டாரங்களின் எதிர்பார்ப்பு.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications