திமுகவுக்காக அரும்பாடுபட்டதால் ஸ்டாலினை தலைவராக ஏற்றோம்: துரைமுருகன்
சென்னை: திமுகவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு எந்த பதவி கொடுத்தாலும் அதை அழகுபடுத்தியதால் தான் மு.க. ஸ்டாலினை தலைவராக எற்றுள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ''தங்க தளபதியே திரும்பி பார்க்கிறோம், திகைத்து நிற்கிறோம்'' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது,
1961ம் ஆண்டு நான் திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்றிருந்தபோது ஸ்டாலின் 10 வயது சிறுவனாக இருந்தார். அவர் தனது தோழர்களுடன் சேர்ந்து கட்சிப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அவர் ஒன்றும் திடீர் என்று தலைவராகிவிடவில்லை. திருமணமான 6வது மாதத்தில் மனைவியைப் பிரிந்து கட்சிக்காக சிறை சென்று சித்ரவதைகள் அனுபவித்தார். கட்சியின் ரத்தநாளமாக இருக்கும் இளைஞர் அணியைத் துவக்கி திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டார்.
சட்டமன்ற உறுப்பினர், மேயர், உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதல்வர், திமுக பொருளாளர் என எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் அதை அழகு படுத்தியவர். அதனால் தான் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளோம். நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தை இரண்டாம் நூற்றாண்டுக்கு அழைத்து செல்கிறார் என்றார்.
கருத்தரங்கில் சு.ப.வீரபாண்டியன், லியோனி சுமதிஸ்ரீ உள்ளிட்ட பலர் பேசினர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications