33% இட ஒதுக்கீடு கேட்டு பெண்கள் போராட வேண்டும்: ஜெயந்தி நடராஜன்
சென்னை: சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க பெண்கள் போராட வேண்டும். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதற்கான சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு தலைமை வகித்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பேசியதாவது,
மகளிர் தினத்தையொட்டி நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் அழகு நிலையங்களில் மட்டும் பெண்களுக்கு 50 சதவீதம் சலுகை என்ற நிலை இருக்கக் கூடாது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 6.1 கோடி பெண்கள் வாக்களித்துள்ளனர். மொத்தமுள்ள 690 தொகுதிகளில் 55 தொகுதிகளில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். மணிப்பூரில் 3 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் கோவாவிலோ ஒரு பெண் கூட வெற்றி பெறவில்லை.
படித்தவர்கள் அதிகமுள்ள பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களில் கூட பெண்கள் குறைவான எண்ணிக்கையிலேயே வெற்றி பெற்றுள்ளனர். சட்டசபை மற்றும்நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடு ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. அதே போல மக்களவையிலும் நிறைவேற்ற வேண்டும். அதற்காக பெண்கள் போராட வேண்டும்.
வரும் 12ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பெண்கள் முன்னேற்றம் என்று மொத்தமாக நிதி ஒதுக்காமல் கல்வி, சுகாதாரம் என்று துறை ரீதியாக ஒதுக்க வேண்டும். இது குறித்து நான் நிதியமைச்சரிடம் வலியுறுத்துவேன்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடி கடன் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 8 குழுக்களுக்கு அவர் தலா ரூ.5 லட்சம் கடன் வழங்கினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications