பிரகாஷ் சிங் பாதல் பதவியேற்பு நிகழ்ச்சி: ஜெ. சார்பில் தம்பிதுரை மற்றும் மைத்ரேயன் பங்கேற்பு!
மதுரை: பஞ்சாப் மாநில முதல்வராக பிரகாஷ்சிங் பாதல் ஐந்தாவது முறையாக பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாதல் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் டாக்டர் மு.தம்பிதுரையும், டாக்டர் வா.மைத்ரேயனும் பங்கேற்க உள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலிதள் - பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணியின் சார்பில் அகாலி தளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் வரும் மார்ச் 14 -ந் தேதி முதல்வராக பதவி ஏற்பு உள்ளார்.
இந்த பதவி ஏற்க விழாவில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் அவர் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் சிரோன்மணி அகாலிதள் - பா.ஜ.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, பிரகாஷ் சிங் பாதல் அம் மாநில முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட பி்ரகாஷ் சிங் பாதல் வரும் 14 -ந் தேதி நடைபெற உள்ள தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டார்.
பிரகாஷ் சிங் பாதல் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் பெரிதும் விழைந்தாலும், 18 -ந் தேதி நடைபெற உள்ள சங்கரன்கோயில் இடைத்தேர்தலை முன்னிட்டு 14 - ந் தேதி முதல் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதனால், அ.தி.மு.க. சார்பில், டாக்டர் மு.தம்பிதுரை, எம்.பி., மற்றும் டாக்டர் வா.மைத்ரேயன், எம்.பி. ஆகியோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications