பிரபாகரன் இருப்பிடத்தை விசாரித்து தெரிந்து கொண்ட பின்னர் கொல்லப்பட்ட பாலச்சந்திரன்!

Subscribe to Oneindia Tamil

Balachandran
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் குறித்து விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்னரே அவரது மகன் பாலச்சந்திரனை கொடூரமாகக் கொலை செய்துள்ளது இலங்கை ராணுவம். இந்தத் தகவலை இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரியே தெரிவித்துள்ளதாக சேனல் 4 நிறுவனத்தின் கேலம் மெக்காரே தெரிவித்துள்ளார்.

இவர்தான் ஏற்கனவே இலங்கையின் போர்க்களம் என்ற பெயரிலான ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டு சிங்கள இனவெறிப் படுகொலையின் பயங்கர முகத்தை உலக சமுதாயத்திற்கு அம்பலப்படுத்தியவர். தற்போது 2வது ஆவணப்படமும் தயாராகியுள்ளது. இதில் பிரபாகரனின் இளைய மகனான 12 வயதேயான பாலச்சந்திரனை கொடூரமாகக் கொலை செய்த காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ நாளை வெளியாகிறது. உலகமே இந்த கோரக் காட்சியைக் காண பதைபதைக்கும் நெஞ்சத்துடன் தயாராக நிற்கிறது.

இந்த நிலையில் கொலை செய்வற்கு முன்பு பாலச்சந்திரனை கொடூரமான சூழலில் விசாரணை செய்து சிங்களப் படையினர் பிரபாகரன் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டுள்ளதாக தற்போது புதிய தகவல் கிடைத்துள்ளது. இதை மெக்காரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கொடுத்த வாக்குமூலம் எங்களிடம் மிகப் பெரிய ஆதாரமாக உள்ளது. பாலச்சந்திரனைப் படுகொலை செய்வதற்கு முன்பு அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது இலங்கை ராணுவம். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி தகவல்களைப் பெற்றுள்ளனர். பின்னரே கொன்றுள்ளனர்.

உண்மையில் ஐந்து பாதுகாவலர்களுடன் பாலச்சந்திரனை, இலங்கை ராணுவத்திடம் சரணடையவே அனுப்பியுள்ளார் பிரபாகரன். ஆனால் பிரபாகரனின் மகனைப் பிடித்துக் கொண்டு முதலில் ஐந்து பாதுகாவலர்களையும் கொன்று விட்டனர். பிறகு பிரபாகரனின் இருப்பிடம் குறித்து தகவல்களைப் பெற்றுக் கொண்டு பாலச்சந்திரனையும் படுகொலை செய்துள்ளனர். இது மிகப் பெரிய போர் விதி மீறலாகும்.

பாலச்சந்திரனின் உடலில் ஐந்து புல்லட்கள் பாய்ந்த வடுக்கள் உள்ளன. ஆனால் சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பான வெளிப்படையான அடையாளம் இல்லை. இருப்பினும் அந்த சிறுவன் இருந்த சூழ்நிலையைப் பாருங்கள். ஐந்து பாதுகாவலர்களை அந்த சிறுவன் கண் முன்பாக கொடூரமாக கொன்றுள்ளனர். பிரபாகரன் குறித்து விசாரித்துள்ளனர். நிச்சயம் சித்திரவதை நடந்திருக்காது என்று கூறுவதை நம்ப முடியவில்லை. அந்த சிறுவனின் கண்களைக் கட்டாமல், கையைக் கட்டாமல் நேரடியாக சுட்டு விட்டனர். அந்த சிறுவனுக்கு முன்பு துப்பாக்கியை நீட்டியபடியே ஒருவர் இருந்துள்ளார். இதுவே மிகப் பெரிய சித்திரவதைதான் என்றார் மெக்காரே.

கேட்கவே நடுங்குகிறதே, இனி வீடியோவைப் பார்க்கும்போது எப்படிப் பதறப் போகிறார்களோ ஈர நெஞ்சம் கொண்ட மக்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+