செரீனாவை ஞாபகமிருக்கிறதா?...நடராஜனை 'மாட்டி விட' அழைக்கிறதாம் போலீஸ்!

மதுரையைச் சேர்ந்தவர் இந்த செரீனா. இளம் பெண்ணான இவர் 2003ம் ஆண்டு செய்தித் தாள்களில் முதல் பக்க செய்தியாக ரொம்ப நாளைக்கு வலம் வந்தவர். காரணம், அரசியல் விளையாட்டில் சிக்கி பந்தாடப்பட்டதால்.
2003ம் ஆண்டு செரீனாவும், அவரது தாயார் ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அப்போது தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடந்து வந்தது. சசிகலா, நெருக்கமான நட்பு வட்டத்தில் இருந்தார்.
செரீனாவின் வீட்டில் கஞ்சா இருந்ததாக கூறி குற்றம் சாட்டப்பட்டது. மேலும் 10 கிலோ கஞ்சாவையும் கோர்ட்டில் காட்டினர். மேலும், சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ரூ. 1.04 கோடி பணத்தையும் பறிமுதல் செய்து அதிலும் செரீனாவை இணைத்து விட்டனர்.
ரொ்ம்ப நாளைக்கு ஏன் இந்தப் பெண் கைது செய்யப்பட்டார், இவரா கஞ்சா பதுக்கினார் என்றெல்லாம் மக்களுக்குப் பெரும் குழப்பம். ஆனால் அவருக்கு ஆதரவாக வாதாட டெல்லியிலிருந்து கபில் சிபல் வந்தபோதுதான் செரீனாவுக்குப் பின்புலம் மிகப் பெரிதாக இருப்பது தெரிய வந்து பெரும் பரபரப்பானது.
செரீனா, நடராஜனின் நட்பு வட்டத்தில் இருந்தவர் என்று அப்போது கூறப்பட்டது. இது நடராஜனின் மனைவி சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவரது விருப்பத்திற்கேற்ப அதிமுக ஆட்சியின் உத்தரவுக்கேற்பவே இந்த கைது நடவடிக்கை என்று அப்போது பரபரப்பு ஏற்பட்டது.
பெரும் போராட்டத்திற்குப் பின்னர் 2006ம் ஆண்டு இந்த வழக்குகளிலிருந்து விடுபட்டார் செரீனா. அதன் பிறகு அவர் என்ன ஆனால் என்ற தகவலே இல்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் செரீனாவை லைம்லைட்டுக்கு இழுக்க மதுரை காவல்துறையிலிருந்து நெருக்குதல் வந்து கொண்டிருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன.
நடராஜனுக்கு மிக நெருக்கமாக இருந்த அவரை இப்போது நடராஜனுக்கு எதிராக திரும்புமாறு சிலர் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், நடராஜனுக்கு எதிராக எதையாவது பேசுமாறும் அவர்கள் அழுத்தம் தருமாறும் கூறப்படுகிறது.
ஆனால் செரீனா இதற்கு உடன்பட மறுத்து வருகிறாராம். தனது படிப்பு ஏற்கனவே பாழாகிப் போய் விட்டது. கஷ்டப்பட்டு பிஎஸ்சி படித்தேன். அதிலும் நிறைய அரியர்ஸ் உள்ளது. அதை முடிப்பதுதான் எனது முக்கிய நோக்கம். எனவே தயவு செய்து மறுபடியும் என்னை வம்பில் இழுத்து விடாதீர்கள் என்று கெஞ்சி வருகிறாராம் செரீனா.
எந்த அளவுக்கு இது உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தற்போது நடராஜனுக்கு நேரம் சரியில்லாமல் இருப்பதால் எப்படியாவது செரீனாவை வைத்து நடராஜனுக்கு மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்த மதுரை வட்டார காவல்துறையிலிருந்து சிலர் தொடர்ந்து செரீனாவை அணத்திக் கொண்டிருப்பதாக பரபரப்பாக கூறப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications