சித்தப்பா நிலத்தையே அபகரித்தவர் திமுக வேட்பாளர்!!: ஜெயலலிதா

இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்துசெல்வியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று முன்தினம் சங்கரன்கோவிலில் சூறாவளிப் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச்சலத்தின் அண்ணன் மகன் தான் திமுக வேட்பாளாரான ஜவஹர் சூரியகுமார். அவர் தனது சித்தப்பாவுக்கு சொந்தமான ரூ.11 லட்சம் மதிப்புள்ள 7 ஏக்கர் நிலத்தை போலி உயில் மூலம் அபகரி்ததுவிட்டார் என்று அருணாச்சலத்தின் மனைவி புகார் கொடுத்தார். இதையடுத்து சூரியகுமார் மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அதைப்பற்றி பேச விரும்பவில்லை. இது தான் திமுகவின் லட்சணம்.
சங்கரன்கோவில் அதிமுகவின் கோட்டை. இங்கு போட்டியிடும் திமுக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் என்றார்.
பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தியது தான் அதிமுகவின் லட்சணம் என்று திமுகவினர் கூறிவருவதற்கு பதிலடி கொடுப்பது போல் ஜெயலலிதாவின் பேச்சு இருந்தது. அதேசமயம் தன்னைப் பற்றி கடுமையாக விமர்சித்து வரும் தேமுதிக, மதிமுக பற்றி அவர் எதுவுமே பேசவில்லை.












Click it and Unblock the Notifications