சென்ட்ரலில் தலையில்லா உடல்: டெல்லி விரையும் சென்னை போலீஸ்
சென்னை: சென்னை ரயில் நிலையத்திற்கு வந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் தலையில்லா ஆணின் உடல் இருந்தது குறித்து விசாரணை நடத்த சென்னை போலீசார் டெல்லி செல்கிறார்கள்.
டெல்லியில் இருந்து புறப்பட்ட கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது. கடந்த 17ம் தேதி காலை 7.15 மணியளவில் ரயிலை சுத்தம் செய்ய சென்ற பணியாளர்கள் 2.5 x 2.5 x 5 அடி இரும்பு பெட்டி கிடந்ததைப் பார்த்தனர். உடனே அவர்கள் இது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சென்ட்ரல் ரயில்வே நிலைய போலீசார் அங்கு வந்து பெட்டியைத் திறந்து பார்த்தனர். அப்போது அதில் கருப்பு நிற பாலிதின் பையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் தலையில்லா உடல் இருந்தது.
இதே போன்று தெற்கு டெல்லியின் சாராய் ரோஹில்லாவில் உள்ள இந்தர்லோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு பையில் தலையில்லா பெண்ணின் உடல் இருந்தது. ஒரே நாளில் டெல்லி மற்றும் சென்னை ரயில் நிலையங்களில் தலையில்லா ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை அவர்கள் காதல் ஜோடிகளாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னைக்கு வந்த ரயிலில் இருந்த தலையில்லா உடல் குறித்து விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு படையினர் டெல்லி செல்கிறார்கள். டெல்லி ரயில் நிலையத்தில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகளை சோதித்துப் பார்க்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இன்னொரு தனிப்படை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் எந்தெந்த ஊர் ரயில் நிலையங்களில் எல்லாம் நின்று வந்ததோ அங்கெல்லாம சென்று விசாரணை நடத்தவிருக்கிறார்கள். மற்றொரு படையினர் சென்னையில் விசாரணை நடத்துகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications