இந்தியாவின் முடிவால் இலங்கையில் மீதமிருக்கும் தமிழர்களின் உயிருக்கு ஆபத்து: கனிமொழி

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத் தொடர் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது நடந்த அத்துமீறல்களை கண்டித்து அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா வரைவு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா உள்பட 24 நாடுகள் வாக்களித்தன. இதனால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது.
மனித உரிமை கவுனிசிலில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளில் 46 நாடுகள் வாக்களிக்கலாம். அதில் தற்போது வெறும் 7 நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. இந்தியா என்ன செய்கிறது என்று பார்த்துவிட்டு முடிவெடுப்போம் என்று சில நாடுகள் முடிவு செய்திருந்தன. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். இதையடுத்து பல நாடுகள் இலங்கைக்கு எதிராகத் திரும்பின. இந்நிலையில் தீர்மானத்தை தோற்கடிக்க பல்வேறு நாடுகளிடம் ஆதரவு கேட்டுக் கொண்டிருந்தது இலங்கை.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் மட்டும் போதாது. அந்நாட்டில் நடந்த அத்துமீறல்களை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும். அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்திருப்பதால் இலங்கையில் உள்ள மீதமிருக்கும் தமிழர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் அங்கிருக்கும் தமிழர்களை மீழ்குடியேற்றம் செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications