For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகளின் தளபதி ரமேஷை படுகொலை செய்து எரிக்கும் கொடூர புகைப்படங்கள்- வெளியிட்டது குளோபல் மெயில்

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஸ் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதற்கான புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

அந்தப் படங்களைக் காண இங்கே க்ளிக் செய்க

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் குளோபல் மெயில் ஏடு தமக்குக் கிடைத்த வீடியோ காட்சியில் இருந்து இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

தளபதி ரமேஸிடம் விசாரணை செய்து படுகொலை செய்யப்படும் வீடியோ காட்சி ஏற்கெனவே வெளியாகி இருந்தன. இந்நிலையில் குளோபல் மெயில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளன.

அதில் ரமேஷ்., விடுதலைப் புலிகளின் சீருடை இருக்கும் காட்சியும் அதன் பின்னர் முதுகில் உள்ள காயத்துக்கு போடப்பட்டிருந்த கட்டை பிரிப்பது, பின்னர் இலங்கை படையின் சீருடையை அணியச் செய்வது, விசாரணை நடத்துவது, கடைசியில் கோரமாக அடித்தும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்வதும் என புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

படுகொலை செய்யப்பட்டு தரையில் கிடத்தப்பட்டுள்ள தளபதி ரமேஷின் உடலை கட்டையில் வைத்த நிலையில் ஒரு படமும், பின்னர் எரிக்கப்படுகிற புகைப்படத்தையும் "கர்னல் ரமேஷின் மரணம்" என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டுள்ளது குளோபல் மெயில்.

மேலும் கர்னல் ரமேஷிடம் விசாரணை நடத்தும் இலங்கைப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரது இருப்பிடம் குறித்த கேள்விகளையே கேட்டதாகவும் குளோபல் மெயில் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி ரமேஸ் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தளபதியாக பணியாற்றியிருந்தார்.

அந்தப் படங்களைக் காண இங்கே க்ளிக் செய்க

English summary
New evidence of the murder of one man is key to revealing a conspiracy behind mass murder. This evidence, shown and told in The Global Mail’s story, is graphic and confronting. The issue is now being debated by the United Nations.This single murder, insignificant of itself, suggests the systematic, large-scale killing of prisoners — civilians and fighters — by the Sri Lankan authorities. Because the interrogators are Sri Lankan soldiers, and the prisoner is Tamil, and neither understands the native language of the other, the interrogation is conducted in patchy English.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X