சிபிஐ ரெய்டு: சுங்கவரி இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.14 லட்சம் பறிமுதல்
சென்னை: சென்னை அருகே சுங்கவரி இன்ஸ்பெக்டர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.14 லட்சம் ரொக்கம் சிக்கியது.
சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூரில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சுங்கவரி இன்ஸ்பெக்டராக இருப்பவர் முரளி கிருஷ்ணன் (44). இந்த மண்டலத்தில் இருந்து எந்த பொருளும் அவர் ஆய்வு செய்து அனுமதியளித்த பிறகே வெளியே செல்ல முடியும். இந்நிலையில் தனியார் ஏ.சி. நிறுவனத்தின் தேவையில்லாத கழிவுப் பொருட்களை சங்கர் ஷனான் என்பவர் டெண்டர் எடுத்திருந்தார்.
ஆனால் அப்பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றால் ரூ.50,000 லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று முரளி கிருஷ்ணன் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஷனான் இது குறித்து சி.பி.ஐ. போலீஸ் கண்காணிப்பாளர் ஈஸ்வர மூர்த்தியிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகளின் ஆலோசனைப்படி ஷனான் முரளியிடம் ரூ.50,000 ரொக்கத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் முரளியை கையும், களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தியதில் ரூ.14 லட்சம் ரொக்கம் சிக்கியது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications