வெப்பம் தணிக்க நீர் மோர், குடிநீர் பந்தல்: அதிமுகவினருக்கு ஜெ. உத்தரவு

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் ஆங்காங்கே தாங்கள் வாழும் பகுதிகளில் குடிநீர் பந்தல்கள், நீர்மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு கழக உடன்பிறப்புகள் இப்பொழுதே ஆங்காங்கே தாங்கள் வாழும் பகுதிகளில் குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கழக உடன்பிறப்புகள், பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக ஆங்காங்கே அமைக்கும் குடிநீர் பந்தல்கள் மற்றும் நீர், மோர் பந்தல்களை காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒருமுறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்க திட்டத்தோடு இந்தப் பணியினை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications